உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி நலவழித்துறை, தேசிய கண் பார்வை இழப்பு தடுப்பு திட்டம் மற்றும் லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கண் தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி லாசுப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிலையத்தில் நடந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தின் விரிவுரையாளர் லோக பிரகாஷ் வரவேற்றார். பயிற்சி நிலையத்தின் முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் நடேசன், சுகாதார உதவி ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், ஜெகநாதன், ரேணுகாதேவி முன்னிலை வகித்தனர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சிந்துஜ ப்ரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண் தான இரு வார விழா குறித்து சிறப்புரையாற்றினார். கண் பரிசோதக தொழில் நுட்பவியலாளர் ஜெயலட்சுமி யார், யாரெல்லாம் கண் தானம் செய்யலாம், கண் தானம் செய்வதற்கான வழிமுறைகள் பற்றி விளக்கிக்கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரிய பயிற்சி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர். விரிவுரையாளர் சசிகலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ