உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி : கணுவாப்பேட் அரசு உயர்நிலைப் பள்ளியில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் பிரகலாதன் முன்னிலை வகித்தார். ஆசிரியை பெரோஷியா வரவேற்றார். வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்தவர்கள் வர்ஷினி, பாமகள் கவிதா ஆகியோர் கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர். செவிலய அதிகாரிகள் சுபலட்சுமி பரமேஷ்வரி, பிரேமாவதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாணவர்கள் நாடகம், பாடல், வில்லுப்பாட்டு மூலம் கண்தானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியை நிர்மலா தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் இளஞ்செழியன், சூரியகுமாரி செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவக் குழு மூலம் பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை பத்மாவதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை