உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு நாடகம்

குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு நாடகம்

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், குடும்ப கட்டுப்பாடு அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடந்தது.சோனியா காந்தி நகர், தட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சித்ரா தலைமை தாங்கினார். கிராமப்புற செவிலியர் தனலட்சுமி வரவேற்றார். புதுச்சேரி சக்தி விக்னேஷ் நாடக மன்ற கலைக்குழுவினர்கள் ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு குறித்து நாடகம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குடும்ப கட்டுப்பாடு குறித்த துண்டு பிரசுரங்களை கிராமப்புற செவிலியர் சுதா பொதுமக்களுக்கு வழங்கினார்.ஏற்பாடுகளை ஆஷா, ஊழியர்கள் வெற்றிச்செல்வி, விருதாம்பாள், நாகராஜன் செய்திருந்தனர்.சுகாதார உதவியாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ