உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சூர்யா படம் வெளியாகாததால் ரசிகர்கள் மறியல்

 சூர்யா படம் வெளியாகாததால் ரசிகர்கள் மறியல்

புதுச்சேரி: சூர்யா நடித்த கருப்பு படம் புதுச்சேரியில் மால், ஜீவா ருக்மணி உள்ளிட்ட தியேட்டர்களில் நேற்று வெளியாக இருந்தது. ரசிகர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். ஜீவா ருக்மணி தியேட்டரில் சூர்யா ரசிகர் மன்றத்தினர், டி.ஜே., இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் திரைப்படத்தைக் காண காத்திருந்தனர். தியேட்டர் நிர்வாகம் திடீரென படக்காட்சி ரத்து என, அறிவித்தது. அதிருப்தி அடைந்த ரசிகர்கள் தியேட்டர் எதிரே காமராஜ் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது. பெரியக்கடை போலீசார் அங்கு விரைந்து, பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர். முன்பதிவு டிக்கெட்டு தொகை திரும்ப வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ