மேலும் செய்திகள்
மாடு மேய்க்க சென்ற நபர் ஆற்றில் சடலமாக மீட்பு
05-Jan-2025
செஞ்சி: வழி தகராறில் உறவினரை வெட்டி கொலை செய்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன்கள் சங்கர், 40; சேகர், 35; இவர்களது பெரியப்பா கோவிந்தராஜின் மகன் ஏழுமலை,45; இரு குடும்பத்திற்கும் பாதை தகராறு உள்ளது. இதுகுறித்து இரு தரப்பிலும் பஞ்சாயத்து பேசி வரும் 20ம் தேதி பாக பிரிவினை செய்து ரிஜிஸ்டர் செய்ய இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை பிரச்னை உள்ள வழியாக ஏழுமலை சென்றபோது சேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாலை 6 மணிக்கு ஏழுமலை, அவரது மகன்கள் கிருஷ்ணன்,20; அரவிந்தன்,18; மற்றும் குடும்பத்தினர் சேகர் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர்.அப்போது ஏழுமலை தரப்பினர் அறிவாளால் வெட்டியதில் சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சங்கர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தகவலறிந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் விரைந்து சென்று, சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து ஏழுமலை மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
05-Jan-2025