உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நெட்டப்பாக்கம்: விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கண்டமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பு குழு தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயராமன், துணைத் தலைவர்கள் ராமகிருஷ்ணன், பாஸ்கர், துணை செயலாளர்கள் ஆதிமூலம், பழனி, செயலாளர்கள் ஜெயகோபி, விஜி, ஆறுமுகம், முத்துராமன், அருள், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து இயக்கி கரும்பு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். திருபுவனை விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் கடன் மற்றும் வைப்பு நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அவர்களின் சொத்தை பறிமுதல் செய்து வாடிக்கையாளர்களுக்கு சேரவேண்டிய பணத்தை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படடன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை