உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் பாகூர் பகுதி விவசாயிகள் கவலை

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் பாகூர் பகுதி விவசாயிகள் கவலை

பாகூர்: வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், பாகூர் பகுதியில் சம்பா பின் பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள்,நீரில் மூழ்கி உள்ளது. புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், பாகூர் பகுதியில் சம்பா பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற் பயிர்கள் பல இடங்களில் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. குறிப்பாக, பாகூர் புறவழிச்சாலை பகுதி,கிருமாம்பாக்கம் அருகே உள்ள பனித்திட்டு ஓடை அருகே உள்ள வயல்வெளி பகுதியில் மழைநீர் வெளியேற வழியின்றி வயலில் தேங்கி நிற்பதால், நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. சம்பா பின் பருவத்தில் இயந்திரம் மூலமாக நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுகள் என்பதால், வளர்ச்சி குறைவாக இருக்கும் நிலையில்,மழை தொடர்ந்து பெய்தால், நீரில் மூழ்கி அழுகி விடும் என, விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை