உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

புதுச்சேரி: நடை பயிற்சிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். மூலக்குளம், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்,43; சுமை துாக்கும் தொழிலாளி. இவரது மனைவி பென்னரசி,37; இவர்களுக்கு சுஜித்திரா,18; என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். பென்னரசி, கணவர் மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வேலூரில் வசிக்கிறார். சுரேஷ் தனது பிள்ளைகளுடன், இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த 24ம் தேதி இரவு 9 மணிக்கு சுஜித்திரா சாப்பிட்டு விட்டு வீட்டின் வெளியே நடைபயிற்சிக்கு சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து சுஜித்திராவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி