உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க அரசுக்கு கூட்டமைப்பு கோரிக்கை

ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க அரசுக்கு கூட்டமைப்பு கோரிக்கை

புதுச்சேரி: அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரியுள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் தலைவர் எட்வர்டு சார்லஸ் விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், மாத சம்பளத்தை நம்பியுள்ள ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் கவர்னர், முதல்வர், அமைச்சர் ஆகியோர் உடனடியாக தலையிட்டு, அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை