மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
24-Jul-2026
புதுச்சேரி: புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்று செல்லும் நீதிபதி சுமதிக்கு பாராட்டு விழா நடந்தது. புதுச்சேரியில் மாவட்ட போக்சோ நீதிபதியாக பணியாற்றிய சுமதி, சென்னை உயர்நீதிமன்த்திற்கு பதவி உயர்வு பெற்று செல்கிறார். புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், அவருக்கு பாராட்டு விழா, புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது. புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரமேஷ், பொது செயலாளர் நாராயணகுமார், துணைத் தலைவி இந்துமதி புவனேஸ்வரி, பொருளாளர் ராஜபிரகாஷ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். நீதிபதி சுமதிக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அனைத்து நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
24-Jul-2026