உள்ளூர் செய்திகள்

 பெண் மாயம்

புதுச்சேரி: பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியூர், பாரதி நகர், மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி சவுந்தர்யா, 25. வில்லியனுார், தொண்டாமநத்தத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் வசித்து வந்தனர். கடந்த 1ம் தேதி சரவணன் வேலைக்கு சென்று, பின் 3ம் தேதி காலை வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவி சவுந்தர்யா வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், வில்லி யனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ