உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கைவினை கிராமத்திற்கு களப்பயணம்

 கைவினை கிராமத்திற்கு களப்பயணம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி மையத்தில் பயிலும் மழலையர் பயிற்சி மாணவிகள் 150 பேர், முருங்கப்பாக்கம் கைவினை கலை கிராமத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர். அப்போது, மாணவிகள் அங்கிருந்த பல்வேறு கலை பொருட்களை பார்வையிட்டு, அதனுடைய பயன்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு, பத்மஸ்ரீ விருது பெற்ற கைவினை கலைஞர் முனுசாமி 'சுடு களிமண் மூலம் பொம்மைகள் உருவாக்குவது' குறித்து பயிற்சி அளித்தார். அதன்படி, விலங்குகள், சுவாமி சிலைகள், பறவைகள் ஆகியவற்றை களி மண்ணால் செய்து காட்டி, மாணவிகளுக்கு செயல் விளக்கம் அளித்து, அவர், பேசுகை யில், 'வாழ்க்கையில் தோல்வி என்பது நிரந்தரமல்ல அதனை தைரியமாக எதிர் கொண்டால் வெற்றி பெறலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ