மேலும் செய்திகள்
ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலகம் இடமாற்றம்
02-Apr-2026
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அலுவலகத்தில், கோப்புகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். லாஸ்பேட்டை, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக, கல்லுாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சில முக்கிய ஆவணங்கள் மாயமானது தெரியவந்தது. அந்த ஆவணங்கள், கல்லுாரியில் தற்காலிக அடிப்படையில் விரிவுரையாளர்களைப் பணியமர்த்தியது தொடர்பான முக்கியமான அரசு கோப்புகள் ஆகும். மர்ம நபர்கள் யாரோ அலுவலகத்திற்குள் புகுந்து இந்தக் கோப்புகளைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கல்லுாரி முதல்வர் நாககார்த்திகன் புகார் அளித்தார். புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Apr-2026