உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கும்பாபிேஷக திருப்பணிக்கு நிதியுதவி

கும்பாபிேஷக திருப்பணிக்கு நிதியுதவி

புதுச்சேரி: தாகூர் நகர், சுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக ரூ.2.50 லட்சம் நிதியுதவியை அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார். தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட தாகூர் நகரில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேக திருப்பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்து அறநிலையத்துறை மூலம் முதற் கட்டமாக ரூ.2.50 லட்சத்திற்கான காசோலையை அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாகிகளிடம் நேற்று வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை