அட்டை கம்பெனியில் தீ விபத்து பல லட்சம் பொருட்கள் சேதம்
புதுச்சேரி : மேட்டுப்பாளையம் அடுத்த குருமாம்பேட் பகுதியில் தனியார் அட்டை கம்பெனி உள்ளது. இங்கு நேற்று காலை 11.00 மணியளவில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதில் கம்பெனியில் தயார் நிலையில் இருந்த அட்டை பெட்டிகள் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்த கோரிமேடு தீயணைப்பு அதிகாரி மனோகர் தலைமையில் 2 தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் வில்லியனுாரில் இருந்து தீயணைப்பு வாகனம் விரைந்து சென்று 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் கம்பெனியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பாலகின.