உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மடுகரையில் மின் கசிவால் தீ விபத்து

 மடுகரையில் மின் கசிவால் தீ விபத்து

நெட்டப்பாக்கம்: மடுகரையில் மின்கசிவு காரணமாக கூரைவீடு முற்றிலும் எரிந்து சாம்பாலனது. மடுகரை, முத்துநகர், 3வது தெருவைச் சேர்ந்தவர் சேகர், 55; கூலித்தொழிலாளி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் மாலை மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த மடுகரை தீயணைப்பு வீரர்கள் விரைந்துசென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சாம்பாலனது. இச்சம்பவம் குறித்து மடுகரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ