உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீயணைப்பு பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

தீயணைப்பு பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

புதுச்சேரி: தீயணைப்பாளர் மற்றும் தீயணைப்பு வாகன ஓட்டுநர் நிலை -3 பணியிடத்திற்கான தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.புதுச்சேரியில் தீயணைப்பாளர் மற்றும் தீயணைப்பு வாகன ஓட்டுநர் நிலை-3 என,மொத்தம் 70 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 9ம் தேதி நடந்தது. இத்தேர்வினை 1,732 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது.தீயணைப்பாளர் (ஆண்கள்) பொதுப் பிரிவில் ஹரிகரன் 82.25 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மோகன்ராஜ் 70.26 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பெற்றனர். பொதுபிரிவில் 16 பேர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 11 பேர், இ.பி.சி., பிரிவில் 2 பேர்,பி.சி.எம்., பிரிவில் 2 பேர், எஸ்.சி., பிரிவில் 4 பேர், எஸ்.டி., பிரிவில் ஒருவர்,பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவில் 3 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.பெண்கள் பொது பிரிவில் அனந்த மொழி 69.75 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். பொது பிரிவில் 10 பேர், மிகவும் பிற்படுத்தபட்டோர் பிரிவில் 5 பேர்,இ.பி.சி., பிரிவில் ஒருவர், எஸ்.சி., பிரிவில் 2 பேர்தேர்வு பெற்றனர்.தீயணைப்பு வாகன ஒட்டுனர் நிலை-3 பணிக்கு பொதுப்பிரிவில் ராகவன் 78 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், அமர்நாத் 71.75 மதிப்பெண்கள் பெற்று 2வது இடம், ஸ்ரீமுருகேஷ் 66.25 மதிப்பெண்கள் பெற்று 3வது இடம் பெற்றார்.பொதுப்பிரிவில் 7 பேர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 2 பேர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ஒருவர்,எஸ்.சி.பிரிவில் 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இத்தகவலை அரசு செயலாளர் பங்கஜ் குமார் ஜா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி