உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டாசு உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு ஆலோசனை

பட்டாசு உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு ஆலோசனை

வில்லியனுார்: வில்லியனுார் தெற்கு பகுதி சப் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் குமரன் தலைமை தாங்கிானர். வில்லியனுார் மற்றும் பாகூர் தாசில்தார் அலுவலக பகுதிகளில் செயல்பட்டு வரும் உரிமம் பெற்ற பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள், வெடி பொருட்கள் சட்டம், வெடிபொருட்கள் விதிகள் மற்றும் உரிமம் நிபந்தனைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு காப்பீடு, பாதுகாப்பு கவசம், உற்பத்தி நிலையங்களில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை தவிர்ப்பது என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ