உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டோ தொழிலாளர்களுக்கு முதலுதவி பயிற்சி அறிமுகம்

ஆட்டோ தொழிலாளர்களுக்கு முதலுதவி பயிற்சி அறிமுகம்

புதுச்சேரி: புதுச்சேரி ஆட்டோ தொழிலாளர்களுக்கு அலர்ட் அமைப்பு சார்பில் முதலுதவி பயிற்சியளிப்பது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி நடந்தது.லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு அலர்ட் அமைப்பின் தலைவர் மனநாதன் வரவேற்றார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சேர்மன் லட்சுமிபதி, ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.போக்குவரத்து எஸ்.பி., செல்வம் முதலுதவி பயிற்சி குறித்து விளக்கம் அளித்தார். ஜெனோ மாறன் பில்டர்ஸ் தங்க மணிமாறன் நன்றி கூறினார். இதில், ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, முதலுதவி தொடர்பாக வரும் டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் 100 ஆட்டோ தொழிலாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ