அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
பாகூர்: புதுச்சேரி விநாயகா மிஷன் வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின், நடப்பு கல்வி ஆண்டிற்கான, முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, துறையின் டீன் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கண் ஒளியியல் பிரிவு துறை பேராசிரியர் வெண்ணிலா வரவேற்றார். புதுச்சேரி பிரிவு இயக்குநர் ஆன்ட்ரூ ஜான் கல்லுாரியின் வளர்ச்சி குறித்து பேசினார். டீன் செந்தில்குமார் பேசுகையில் 'அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தோற்றம், அலைடு ஹெல்த் சயின்ஸ் கடந்த ஆண்டுகளில் செய்த சாதனைகள், மாணவர்களின் வேலை வாய்ப்பு, விளையாட்டுத் துறையில் கல்லுாரி மாணவர்களின் சாதனைகளை' விளக்கினார். சிறப்பு விருந்தினரான முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்று, முதலாமாண்டு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பின் முக்கிய அம்சங்கள் குறித்தும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவதுறையில் படிக்க தேர்ந்தெடுத்ததை பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் 800க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். ஏற்பாடுகளை, துறையின் நிர்வாக அதிகாரி சந்துரு, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் செய்திருந்தனர். துறையின் ஒருங்கிணைப்பாளர் வளர்மதி நன்றி கூறினார்.