உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் மீன்வளத்துறை எச்சரிக்கை

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் மீன்வளத்துறை எச்சரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் நாளை மறுதினம் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வட தமிழக கடலோரப்பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் நாளை மறுதினம் வரை, கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.புதுச்சேரி மீன்வளத்துறை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை குறித்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்களின் மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் மூலம் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.வங்கக்கடலில் அடுத்தடுத்து நிலவும் வானிலை மாற்றங்களை பொருத்து இந்த எச்சரிக்கை மாறுபடும் என்பதால், மீனவர்களுக்கு புதுச்சேரி அரசு அவ்வப்போது வெளியிடும் வானிலை சம்மந்தப்பட்ட எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ