மேலும் செய்திகள்
அனுமதியின்றி பேனர்: போலீசார் வழக்கு பதிவு
15-Nov-2025
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 46; மீனவர்.இவர் நேற்று இரவு 10 மணியளவில், நல்லவாடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பைக்கில் வந்த பத்துக்கும் மேற்பட்ட கும்பல் வெற்றிவேலை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இதில் பலத்த காயமடைந்த வெற்றிவேலை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து கத்தியால் வெட்டிய கும்பலை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15-Nov-2025