உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நல்லவாடு கிராமத்தில் மீனவர்கள் அமைதி கூட்டம்

நல்லவாடு கிராமத்தில் மீனவர்கள் அமைதி கூட்டம்

அரியாங்குப்பம்: நல்லவாடு கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக மீனவர்கள் அமைதி கூட்டம் நடத்தினர். தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு கிராமத்தில் தெற்கு மற்றும் வடக்கு என தனித்தனி பஞ்சாயத்துகள் இருக்கின்றன. இதில், வடக்கு பகுதியில் தில்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த மாதம் செடல் திருவிழா நடந்தது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர், திருவிழா நடந்து, முடிந்த தில்லையம்மன் கோவிலுக்கு, வரும் 24ம் தேதி தனியாக திருவிழா நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு, நல்லவாடு மீனவ பஞ்சாயத்து சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு கோவிலுக்கு இருமுறை திருவிழா நடத்த கூடாது என நல்லவாடு மீனவர்கள் கடந்த 14ம் தேதி, அரியாங்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் எஸ்.பி., பக்தவச்சலம் முன்னிலையில் அமைதி கூட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து, நேற்று நல்லவாடில் மீனவர்கள் அமைதி கூட்டம் நடத்தினர். அதில், பல ஆண்டுகளாக கோவிலுக்கு மீனவர்கள் சார்பில், ஒன்றுமையுடன் திருவிழா நடத்தி வருகிறோம். இரண்டு முறை திருவிழா நடத்துவது சரியல்ல, அதனால், பல்வேறு பிரச்னைகள் வரும் என்பதால், திருவிழாவை நடத்த கூடாது என கூட்டத்தில் வலிறுத்தினர். இது தொடர்பாக, மீனவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை