உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்

புதுச்சேரி: மீன்பிடி தடைக்காலம் நாளை 14ம் தேதி முடிவடைவதால், மீனவர்கள் மீன் பிடிக்க வலைகளை படகுகளில் ஏற்றி மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர்.வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு ஆண்டு தோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில்,மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைக்கும் பணி மற்றும் வலை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுப்பட்டு வந்தனர். இந்நிலையில், நாளை 14ம் தேதியுடன் தடைக்காலம் முடிவதால், மீனவர்கள், மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர். தேங்காய்த்திட்டு துறைமுகத்தில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில் மீன் வலைகளை மீனவர்கள் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், மத்திய அரசு மீன்வள அமைச்சகத்தின் உத்தரவின்படி, தேங்காய்த்திட்டு துறைமுகத்தில்,உள்ள விசைப்படகுகளை கணக்கு எடுக்கும் பணியை நேற்று மீன்வளத்துறை அதிகாரிகள் துவக்கினர்.தடை காலத்தில்,பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத மீன்பிடி படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, மத்திய மீன்வள அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.இந்த கணக்கெடுப்பில், படகு உரிமையாளர் பெயர், பதிவெண்,இன்ஜின் எண் உள்ளிட்ட விபரங்களை அதிகாரிகள் குறிப்பெடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை