மீனவர் பிரச்னை அமைதி பேச்சு வார்த்தை
புதுச்சேரி : நல்லவாடு வடக்கு மீனவ கிராமத்தில் ஏற்பட்டு பிரச்னை தொடர்பாாக அமைதி பேச்சு வார்த்தை சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்தது. நல்லவாடு வடக்கு மீனவ கிராமத்தில் மீனவ பஞ்சாயத்தாரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியது. இதையொட்டி, இரு தரப்பினருக்கான அமைதி பேச்சுவார்த்தை சட்டசபை சபாநாயகர் அலுவலகத்தில் நடந்தது. சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி., கலைவாணன், தாசில்தார் பிரித்திவி, எஸ்.பி., செல்வம் மற்றும் மீனவ பஞ்சாயத்தார் கலந்து கொண்டனர். இதில், இரு தரப்பினருக்கு இடையே சுமூக முடிவு எடுக்கப்பட்டு, 12 நபர்களைக் கொண்ட புதிய மீனவ கிராம நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் சமாதானமாக சென்றனர்.