உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது

மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில், நேற்று நள்ளிரவு முதல் மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.கிழக்கு கடற்கரை வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், மீன்பிடி தடைக்காலம் ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.ஏப்ரல் முதல் மே மாதம் வரை, ஆழ்கடலில், மீன்கள் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, இனப்பெருக்க காலமாகும். இந்த காலத்தில், விசை படகுகள் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரையிலான 61 நாட்கள் புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில் மீன் பிடிக்க தடை செய்யப்படுகிறது.அதே போல, மாகி, பகுதி களில், ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை வரை 61 நாட்கள் இயந்திரம் பொருத்திய படகுகளில் மீன்பிடிக்க தடை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !