கஞ்சா விற்க முயன்ற ஐந்து பேர் கைது
புதுச்சேரி : வில்லியனுார் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். நேற்று அதிகாலை 5:30 மணியளவில், வில்லியனுார் பொறையூர் மெயின்ரோடு அரசு பள்ளி அருகில், சந்தேகப்படும்படி மூன்று வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் கோபாலன்கடை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மைக்கேல்ராஜ், 27; வின்சென்ட், 22; பொறையூர்பேட் மணிகண்டன், 24, என்பதும், அவர்களுடன் சேர்ந்து கோபாலன் கடை குமார் 24; சரண்ராஜ், 24, ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கூடியிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, ஐந்து பேரையும் கைது செய்தனர். இதில், குமார், சரண்ராஜ் ஆகியோர் மீது வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகள் வில்லியனுார் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.