உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  லட்சுமி நரசிம்மர் கோவிலில் கொடியேற்றம்

 லட்சுமி நரசிம்மர் கோவிலில் கொடியேற்றம்

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அருகே உள்ள சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா, துவங்குகிறது. இதையொட்டி, அதிகாலை 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நிகழ்ச்சி, இரவு 7:00 மணியவில் ஹம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. இன்று 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை சுவாமி வீதியுலா நடக்கிறது. 26ம் தேதி கருடசேவை நிகழ்ச்சி, சுவாமி வீதியுலா, முக்கிய நிகழ்வான 30ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. வரும் 1ம் தேதி இந்திர விமான வீதியுலா, 2ம் தேதி, புஷ்ப யாகம், 3ம் தேதி, இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி