குரு சித்தானந்த சுவாமி கோவிலில் பூணுால் மாற்றும் வைபவம்
புதுச்சேரி, : கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில், ரிக், யஜூர் வேத ஆவணி அவிட்டம் நேற்று நடந்தது. ரிக், யஜூர் வேதத்தை சேர்ந்தவர்களுக்கு ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 5:30 மணி முதல் பகல் 12:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குழுக்களாக பூணுால் அணியும் வைபவம் நடந்தது. இன்று (10ம் தேதி) காலை 5:30 மணிக்கு காயத்ரி ஜபம், ேஹாமம் நடக்கவுள்ளது, ஏற்பாடுகளை ராஜா சாஸ்திரிகள் தலைமையில் பிராமணர் சங்கம், சங்கர பக்த சபா செய்திருந்தது. இதே போல், வெங்கட்டா நகர் விஜய கணபதி கோவிலிலும், காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலிலும் கீதாராம சாஸ்திரிகள் தலைமையில் ரிக், யஜூர் ஆவணி அவிட்டம் நடந்தது.