உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாநில எல்லை பகுதிகளில் பறக்கும் படை தீவிர சோதனை

 மாநில எல்லை பகுதிகளில் பறக்கும் படை தீவிர சோதனை

புதுச்சேரி: கோரிமேடு எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் 9ம் தேதி நடக்கிறது. அதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடபட்டு, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.இதையொட்டி, மாநில எல்லைகளில் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படையினர் துணை ராணுவத்தினருடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி கோரிமேடு எல்லையில் கதிரேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், துணை ராணுவத்தினருடன் இணைந்து வெளிமாநில வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு வரபடுகிறதா என தீவிர சோதனை மேற்கொண்டனர்.மேலும், தேர்தலை முன்னிட்டு கட்சி கொடிகளுடன் வந்த கார்களை தடுத்து நிறுத்தி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !