உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆச்சார்யா கல்வி வளாகத்தில் கால்பந்து போட்டி: பரிசளிப்பு

ஆச்சார்யா கல்வி வளாகத்தில் கால்பந்து போட்டி: பரிசளிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி, ஆச்சார்யா கல்வி வளாகத்தில் அஸ்மிதா, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கான ரக்பி கால்பந்து போட்டி நடந்தது. போட்டியினை முன்னாள் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார். இப்போட்டியில், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பெண்கள் பள்ளியை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, புதுச்சேரி அமெச்சூர் ரக்பி சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் பாலஜனகராமன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி ஒலிம்பிக் சங்க செயலாளர் வளவன், விளையாட்டு துறை அதிகாரி சிவகுமார், ஆச்சார்யா கல்வி குழும விளையாட்டு துறை நிர்வாகி சச்சின் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினர். முன்னதாக, மோகன் வரவேற்றார். இணைச்செயலாளர் சிவக்குமார், பொருளாளர் தேவேந்திரன், மூத்த துணை தலைவர் குமரேசன், மணிகண்டன், பல்கலைக்கழக சமுதாய கல்லுாரி பேராசிரியர் ஜெகதீஸ்வரி வாழ்த்தி பேசினர். ஏற்பாடுகளை விஸ்ணுபிரசாத், கிருஷ்ணராஜ், ஜெயமாலினி, சஞ்சய் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை