மேலும் செய்திகள்
கட்டாய 'ஹெல்மெட்' போலீசார் தீவிர சோதனை
20-Jan-2025
புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் அமலுக்கு பின் கடந்த ஒரு மாதத்தில் 1 கோடியே 5 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென சூப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் கடந்த ஜன. 12ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் சென்றால், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டு, போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் எல்லைப் பகுதிகளில் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டியவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, ரூ. 1,000 ஆயிரம் அபராதம் (ஸ்பார்ட் பைன்) விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜன., 12ம் தேதி முதல் பிப்., 12ம் தேதி வரை கடந்த ஒரு மாதத்தில் 1,0592 பேருக்கு, செல்லான் வழங்கப்பட்டு, ரூ. 1 கோடியே 5 லட்சத்து 92 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ரூ. 14 லட்சத்து 31 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
20-Jan-2025