புதுச்சேரி சட்டசபை தேர்தல் ;வெளிநாட்டு பிரதிநிதிகள் பாராட்டு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலின், திட்டமிடல், பரிமாணம், வாக்காளர் பங்கேற்பை 6 நாட்டு பிரதிநிதிகள் பாராட்டினர். இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரகி ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி சட்டசபை தேர்தல் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர் திட்டத்தின் ஒரு பகுதியாக கிர்கிஸ்தான், கோட் டி இவோயர், மால்டோவா, மங்கோலியா, கயனா, பூடான் என, 6 நாட்டின் சர்வதேச பிரதநிதிகள் இந்தியாவின் தேர்தல் செய்முறையின் பரிமாணம், துல்லியம், உற்சாகத்தை நேரடியாக கண்டு அனுபவித்தனர். உண்மையான ஜனநாயக திருவிழா என, வர்ணித்த பிரதநிதிகள், சாதனை அளவிலான வாக்காளர் பங்கேற்பு, திட்டமிடல், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து பாராட்டினர். புதுச்சேரி சட்டசபை தேர்தல் அன்று ட்ரோன் கண்காணிப்பு, நேரடி செயல்பாடுகள், பறக்கும் படையின் செயல்திறன் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியுடன் சர்வதேச பிரதிநிதிகள் கலந்துரையாடினர். ஓட்டுப்பதிவு நாளான்று மங்கலம், ராஜ்பவன் தொகுதியின் ஓட்டுச் சாவடிகளை நேரடியாக இவர்கள் கண்டறிந்தனர். அப்போது ஓட்டுச்சாவடியில் ஏற்படுத்தப்பட்டிருந்த அடிப்படை வசதிகள் குறித்து பாராட்டினர். குறிப்பாக கர்பிணி பெண்கள், முதியோர், ஊனமுற்றோர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு வியப்பை ஏற்படுத்தி இருந்ததாக அவர்கள் பாராட்டியிருந்தனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது