முன்னாள் அரசு பள்ளி மாணவர்கள் 38 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள், பல ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சந்தித்து ஆசிரியர்களை கவுரவித்தனர். புதுச்சேரியில் திரு.வி.க அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், 'வாட்ஸ்அப்' குழு அமைத்து பயணித்து வருகின்றனர். அந்த முன்னாள் மாணவர்கள், 38 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் சந்திக்க திட்டமிட்டனர். இதையொட்டி, புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில், 'ஞாபகம் வருதே' எனும் பெயரில், சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிவக்குமார், சார்லஸ், சங்கரதாஸ், செல்வமணி உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள், 50 பேர் கலந்து கொண்டு தங்கள் நினைவுகளை உற்சாகமாக பகிர்ந்து கொண்டனர். மேலும் சுலோச்சனா, ராஜகோபால், அப்பர் சாமி, தட்சணாமூர்த்தி, காளியப்பன் ஜோஸ்பீன், மோகனன், வாசுதேவன் உள்ளிட்ட ஆசிரியர்கள், 20 பேரை மேடையில் கவுரவித்து நினைவு பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர். அதேபோல, ஆசிரியர்களும் தங்கள் பள்ளி பணி நினைவுகளை முன்னாள் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.