உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாஜி தலைமை ஆசிரியரின் கண்கள் தானம்

 மாஜி தலைமை ஆசிரியரின் கண்கள் தானம்

புதுச்சேரி: இறந்த தலைமை ஆசிரியர் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர். வில்லியனுார், தில்லை நகரை சேர்ந்தவர் அய்யாதுரை 76; ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். உடல் நலம் குறைவு காரணமாக நேற்று காலை இறந்தார். அவரின் கண்களை அவரது மனைவி கஸ்துாரி, மகன் நரேன் பாபு மற்றும் குடும்பத்தினர் கண்தானம் செய்ய முன்வந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனாரை தொடர்பு கொண்டனர். கண்களை தானம் செய்ய அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கிக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் இறந்தவர் வீட்டிற்கு வந்து கண்களை எடுத்தனர். ஜே.சி.ஐ., பாண்டிச்சேரி பிரென்ச் சிட்டி தலைவர் பிரசாந்த், நாகராஜன், ராமன், வில்லியனுார் நண்பர்கள் வட்டம், ஒருங்கிணைப்பாளர் பரசுராமன் ஆகியோர் முன்னிலையில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவிடம் குடும்ப உறுப்பினர்கள் ரெட் கிராஸ் சொசைட்டி நிர் வாக குழு உறுப்பினர் அய்யனார் தலைமையில் கருவிழிகளை தானமாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ