அர சை கண்டித்து போராட்டம் முன்னாள் எம்.எல்.ஏ., அறிவிப்பு
புதுச்சேரி: அதிக மின் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மாநிலத்தில், மின் கட்டணம் சராசரியாக யூனிட்டுக்கு 7 முதல் 9 ரூபாய் வரை வசூல் செய்யும் துறையாக மின் துறை உள்ளது. இந்தியாவிலேயே சர்சார்ஜ் உள்பட பல்வேறு விதவிதமான கட்டணம் வசூல் செய்வது புதுச்சேரியில் மட்டுமே. மாதந்தோறும் மின்கட்டணம் என்ற பெயரில் இந்த அரசு ஏமாற்றி வருகிறது.இந்த அரசு, இலவசம் என்ற பெயரில் 10 கிலோ, 20 கிலோ அரிசி கொடுத்துவிட்டு, அதைவிட அதிக தொகையை வரி என்ற பெயரில் மக்களிடமே வசூல் செய்து, ஏமாற்றுகிறது. மாதந்தோறும் 500 ரூபாய் அரிசியை கொடுத்துவிட்டு, மக்களிடம் மின் கட்டணம், குப்பை வரி, வீட்டு வரி, பாதாள சாக்கடை வரி, தண்ணீர் வரி என்ற பெயரில், பல ஆயிரம் ரூபாடய மறைமுகமாக அரசு வசூல் செய்வதை கண்டித்து, மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். அதிக மின் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, மக்களை ஒன்றிணைத்து விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.