உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன் இல்ல திருமணவிழா 

முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன் இல்ல திருமணவிழா 

டாப்பில் வைக்கவும்: புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் எம். எல்.ஏ., வெங்கடேசன் மகள் திருமணம் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடேசன்–சுபலட்சுமி தம்பதியின் மகள் சவுந்தர்யா மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி தொழிலதிபருமான கிருஷ்ணகுமார்–செண்பகம் தம்பதியரின் மகன் வசந்துக்கும், பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று காலை திருமணம்  நடந்தது. இந்த விழாவில், முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மணமக்கள் சவுந்தர்யா–வசந்த் ஆகியோரை வாழ்த்தினார். மேலும் விழாவில், அமைச்சர்கள், எம்.பி.க்கள்,  எம்.எல்.ஏக்கள்., முன்னாள் எம்.எல்.ஏக்கள்., தமிழக எம்.எல்.ஏக்கள்., அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள், டி.கே. தங்கம் குரூப்ஸ் அலுவலர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண வரவேற்பு விழா நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் நடந்தது. விழாவிற்கு வந்தவர்களை தொழிலதிபர் கலியபெருமாள் மற்றும் அவரின் சகோதரர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. வெங்க டேசன், பாலாஜி  வெங்கடேசன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை