பஞ்சாலை மாஜி ஊழியர்கள் மத்திய அமைச்சருக்கு மனு
புதுச்சேரி: குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7,500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என, ஓய்வு பெற்ற ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுச்சேரி ஏ.எப்.டி., பஞ்சாலை ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க தலைவர் சத்தியசீலன், செயலாளர் சின்னதுரை, பொருளாளர் ரவி, துணை தலைவர்கள் அம்மநாதன், இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நிறுத்தி வைக்கப்பட்ட உயர் ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்களும் முன்மொழிந்தபடி குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உடனடியாக ரூ.7 ஆயிரத்து 500 ஆக உயர்த்த வேண்டும். புதுடில்லி மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பு, உயர் ஓய்வூதியத்தை குறைத்து சீலிங் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட ஓய்வூதியமாக மாற்றுவதற்கான உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.