மேலும் செய்திகள்
கரும்புக்கடை பகுதியில் கஞ்சா விற்றவர்கள் கைது
03-Jul-2025
புதுச்சேரி :மாகியில் தனியார் விடுதி அறையில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து, கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.மாகியில் தனியார் விடுதி அறையில் கஞ்சா விற்பனை செய்வதாக, மாகி போலீசாருக்கு தகவல் வந்தது. அதனையடுத்து, மாகி சப் இன்ஸ்பெக்டர் ரணில்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அங்கு சோதனை நடத்தினர். விடுதி அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அதில், பாக்கெட்டுகள் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதில், கேரளா மாநிலம் தலச்சேரியை சேர்ந்த நிமல்ராஜ், 28; ஷாபாத், 27; வித்யாசாகர், 26; சாஜித், 29, என்பது தெரியவந்தது. அதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, 35 ஆயிரம் மதிப்புள்ள 344 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் அவர்கள் பயன்படுத்திய கார், 4 மொபைல் போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
03-Jul-2025