மேலும் செய்திகள்
நயினார் நாகேந்திரன் நாளை முதல் சுற்றுப்பயணம்
11-Oct-2025
புதுச்சேரி: பல நாட்டு மக்களின் கலாசாரத்தை தெரிந்து கொள்ளவே, சைக்கிளில் பயணம் மேற்கொண்டதாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாலிபர் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் இனோசூரன். இவர் பாரீஸ் நகரில் இருந்து, சைக்கிளில் பயணத்தை துவக்கினார்.கடந்த 3 மாதங்களில், 10 ஆயிரம் கி.மீ., துாரத்தை கடந்து, புதுச்சேரிக்கு நேற்று வந்தார். அவர் கூறுகையில், 'ஒவ்வொரு நாட்டில் வாழும் மக்களை பார்க்க வேண்டும். அவர்களின் கலாசாரத்தை தெரிந்துகொள்ள, சைக்கிளில் சென்றால் தான் முடியும். ஒரு நாளில் 50 முதல் 100 கி.மீ. வரை பயணம் செய்வதாகவும், செல்லும் இடங்களில் மக்கள், வீடுகளில் தங்க வைத்து உபசரித்து அனுப்புகின்றனர். தனது பெற்றோரை பார்க்க இலங்கை செல்வதாக தெரிவித்தார்.
11-Oct-2025