உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக மோசடி

குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக மோசடி

புதுச்சேரி : முதலியார்பேட்டையை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், மத்திய அரசின் முத்ரா லோன் திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரையில், குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். இதைநம்பி, மர்ம நபரின் 'வாட்ஸ் ஆப்' எண்ணில், லோன் பெறுவதற்கான ஆவணங்களை அனுப்பியுள்ளார்.இதையடுத்து, லோன் வழங்க செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டுமென மர்ம நபர் கூறியுள்ளார். இதனையும் நம்பிய அவர், மர்மநபருக்கு 13 ஆயிரத்து 900 ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை