பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
புதுச்சேரி: நெல்லித்தோப்பு அரசு உதவிபெறும் இமாகுலேட் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் ரபேக்காள்மேரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கார்த்திக்கேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு 2025–26 கல்வியாண்டில் 9ம் வகுப்பு படித்த 88 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கனார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.