மேலும் செய்திகள்
இலவச மருத்துவ கல்வி உபகரணங்கள் வழங்கல்
05-Nov-2024
புதுச்சேரி: சூரமங்கலம் அரசு துவக்கப்பள்ளியில் இலவச புத்தக பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஜெகத்தி பவுண்டேசஷன் புதுச்சேரி மாநில கிளை அலுவலகம் சார்பில், சூரமங்கலம் அரசு துவக்க பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தக பை மற்றும் கணினி கற்பித்தலுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஜெகத்தி பவுண்டேஷன் துணைத் தலைவர் அபுபுக்கர், புதுச்சேரி கிளை பொறுப்பாளர் சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
05-Nov-2024