உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி 

 இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி 

நெட்டப்பாக்கம்: மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி துணை முதல்வர் செம்பியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் துணை சபாநாயகர் ராஜவேலு 2022-23ம் கல்வியாண்டில் படித்த மாணவிகளுக்கும், 2025-26 கல்வியாண்டில் படிக்கும் பிளஸ் 1 மாணவிகள் என, மொத்தம் 170 பேருக்கு மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக சேவகர் தனபூபதி, தலைமை ஆசிரியர், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ