மேலும் செய்திகள்
கூட்டுறவு துறை வாரவிழா இலவச மருத்துவ முகாம்
17-Nov-2024
புதுச்சேரி: வில்லியனுாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய மருத்துவ சங்கம், புதுச்சேரி மருத்துவ சங்கம் மற்றும் சேவா பாரதி இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வில்லியனுாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர். பல்வேறு மருத்துவர்கள் தங்களது கிளினிக்கில் ஒரு நாள் இலவச மருத்துவ பரிசோதனை செய்தனர்.ஏற்பாடுகளை சேவா பாரதி பொறுப்பாளர் டாக்டர் சித்தார்த் செய்திருந்தார்.
17-Nov-2024