மேலும் செய்திகள்
விளம்பர செய்தி இலவச மருத்துவ முகாம்
13-Mar-2026
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். புதுச்சேரி முதலியார் பிள்ளைமார் சங்கம், எம்.வி.ஆர்., மருத்துவ மையம் மற்றும் வாசன் ஐ கேர் மருத்துவமனை இணைந்து புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் இலவச மருத்துவ முகாமை நடத்தின. முகாமில், பொதுமக்களுக்கு ஹீமோகுளோபின் மற்றும் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம்,ஈ.சி.ஜி., கண் பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், நீரிழிவு நோய் நிபுணர் வித்யா, மருத்துவர்கள் சரஸ்வதி, ஐஸ்வர்யா, அவின், பிரதாப் வசீகர், கார்த்திக், மேரி ஸ்டீபன் ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
13-Mar-2026