உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச அரிசி அடுத்த மாதம் வழங்கப்படும்

இலவச அரிசி அடுத்த மாதம் வழங்கப்படும்

முதல்வர் ரங்கசாமி அறிவிப்புபுதுச்சேரி: ரேஷன் கடையில் மாதந்திர இலவச அரிசி அடுத்த மாதம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.முதலியார்பேட்டை சுதானா நகரில் கட்டப்பட்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது; புதுச்சேரியில் தற்போது நடக்கும் திட்டங்கள் போல் கடந்த ஆட்சியில் ஏதேனும் திட்டம் நடந்துள்ளதா. பல கோடி செலவில் நகர மற்றும் கிராமப்புற அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தடைப்பட்டு இருந்த லாம்பார்ட் சரவணன் நகர் குடியிருப்பு கட்டும் பணி மீண்டும் துவங்கி உள்ளது. அங்கு, புதிதாக கட்டப்படும் 110 வீடுகள் சாலையோரம் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு வழங்கப்படும். குமரகுருபள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு விரைவில் வழங்க உள்ளோம்.கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு ஆண்டிற்கு ரூ. 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி அறிவித்தும் வழங்காமல் இருந்தனர். இந்தாண்டு 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் ரூ. 66 கோடி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கான அரிசி, சர்க்கரை வழங்கி உள்ளோம். மாதந்தோறும் வழங்கும் இலவச அரிசிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரேஷன் கடை மூலம் இலவச அரிசி வழங்கப்படும். அட்டவணை இன மக்களின் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டுமோ படிக்கலாம். வெளிநாட்டில் படிக்க வேண்டுமானாலும் படிக்கலாம். அவர்களுக்கான நிதியை முழுமையாக செயல்படுத்தி வருகிறது. மின்துறை, கூட்டுறவு துறைகளில் தேர்வு நடக்க உள்ளது. தகுதியானவர்கள் தேர்ந்தெடுத்து வேலை வாய்ப்பு வழங்கி வருகிறோம் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை