கிராமங்களுக்கு கட்டணமில்லா ேஷர் ஆட்டோ
புதுச்சேரி: பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு கட்டணமில்லா ேஷர் ஆட்டோ இயக்க வேண்டும் என செந்தில்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கையில் அசோக்பாபு (பா.ஜ.,) எம்.எல்.ஏ., பேசுகையில், பி.ஆர்.டி.சி., சார்பில் தமிழகத்தின் முக்கிய ஊர்களுக்கு புறநகர் பஸ்களை இயக்க வேண்டும். நகரின் அனைத்து நகர் பகுதிகளுக்கும் மினி பஸ்கள் இயக்க வேண்டும் என்றார்.அப்போது குறுக்கிட்ட செந்தில்குமார் (தி.மு.க.,) எம்.எல்.ஏ., எனது பாகூர் தொகுதியில் பாகூர் வரை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. அங்கிருந்த பரிக்கல்பட்டு வரை பஸ் வசதி இல்லை. எனவே, பாகூரில் இருந்து பரிக்கல்பட்டு உள்ளிட்ட குக்கிராமங்களுக்கு மினி பஸ் இயக்க வேண்டும். குறைந்தபட்சம் கட்டணமில்லா ேஷர் ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.அப்போது பேசிய துணை சபாநாயகர் ராஜவேலு, எனது நெட்டப்பாக்கம் தொகுதியிலும் இந்த நிலைதான் நீடிக்கிறது. மணமேடு, கரையாம்புத்துார் போன்ற இடங்களுக்கும் இதுபோன்று ஷேர் ஆட்டோ இயக்கலாம் என்றார்.