உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்டர் மீடியனில் தேவையற்ற இடைவெளியால் அடிக்கடி விபத்து

சென்டர் மீடியனில் தேவையற்ற இடைவெளியால் அடிக்கடி விபத்து

வில்லியனுார் : வில்லியனுார் முதல் இந்திரா சிலை வரையில் சென்டர் மீடியனில் தேவையில்லாமல் இடைவெளிகளில் திடீரென புகுந்து வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ஆரியப்பாளையம் சங்காரபணி ஆற்றில் புதிய மேம்பாலம் அமைத்தல், இந்திரா சதுக்கம் முதல் எம்.என்.குப்பம் வரையில் சாலை அகலப்படுத்தி இருபுறமும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி சென்டர் மீடியன் அமைக்கும் பணியை செய்துள்ளனர்.எந்த நோக்கத்திற்காக சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதோ, அதனை கெடுக்கும் வகையில் பல இடங்களில் தேவையில்லாமல் இடைவெளி விட்டுள்ளதால், திடீர் என புகுந்து வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.சென்டர் மீடியனில் சாலை மிகவும் குறுகலாகி ஒரே நேரத்தில் இரு கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரெட்டியார்பாளையம், கம்பன் நகர், மூலகுளம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சென்டர் மீடியன் அமைத்துள்ளதால், சாலை மிகவும் குறுகி இரண்டு கார்கள் ஒரே நேரத்தில் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் மெயின்ரோட்டில் உள்ள கடைகளுக்கு முன், இருசக்கர வாகனங்களை வரிசை கட்டி நிறுத்தி வருவதால், போக்குவரத்துத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சுல்தான்பேட்டை முதல் இந்திரா சதுக்கம் வரை ஆய்வு செய்து சென்டர் மீடியனில் உள்ள தேவையற்ற இடைவெளியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை