மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
05-Oct-2024
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி பிரோற்சவம் விழா வரும் 1ம் தேதி துவங்குகிறது.நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமரப்பா சுவாமிக்கு கந்தசஷ்டி பிரமோற்சவ பெருவிழா வரும் 1ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. இதையொட்டி, புற்றுமண் எடுத்தல், வாஸ்து சாந்தி நடக்கிறது. 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை தினமும் செல்வ முத்துகுமரப்பா சுவாமிக்கு காலை அபிேஷகம், ஆராதனைகளும், மாலை 6.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. 7ம் தேதி மாலை 6.00 மணிக்கு சூரபத்ரன் சம்ஹாரம் நடக்கிறது. 8ம் தேதி இரவு 7.00 மணிக்கு வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.
05-Oct-2024